தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு ஜனாதிபதி அறிவித்ததாக இன்று (03) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.