ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவுக்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை- ஊடக சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

 

 

வரதன்

 

 

 

 

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் பொது  வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து  நிதிகளை பெற்றுக் கொண்டவர்கள்தான் ,அதன்பின் மாறியவர்களும் உண்டு. இவர்களுக்கிடையே சரியான நிலைப்பாடு எதுவும் இல்லை ஜனாதிபதி  ரணில்  விக்ரம சிங்கவுக்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என   ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் .
நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்தவர்  ரணில் விக்கிரமசிங்க அதனை யாரும் மறுக்க முடியாது,  இவர்களது பொருளாதாரக் கொள்கைகளை  தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்தால்  அமெரிக்க ஜனாதிபதியினால் கூட இவ்வாறு தயாரித்திருக்க முடியாது பெறப்பட்ட கடன்களை மீள அடைக்க வேண்டும்,  தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அது சலுகைகளை நிறுத்திவிட்டால் பெறப்பட்ட கடனை அடைக்க முடியுமா ?


பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்கும் படி ஜனாதிபதி கூறியுள்ளார்,  பெறப்பட்ட கடன்களை அடைக்காமல் எவ்வாறு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையும் எவ்வாறு கொடுப்பது இல்லாவிட்டால் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலையே வரும் இதனை எல்லாம் மக்கள் நன்கு சிந்திக்க கூடியவர்கள் எனவே 21 தேதி அவர்கள் நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் இதனாலேயே நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவினை வழங்கி வருகின்றோம்


பொது வேட்பாளர் விடயத்தில் தவறான கருத்துக்கள் சமூகத்தில் உண்டு நான் அறிந்த வரையில் ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவுக்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே  எனது உறுதியான நிலைப்பாடு என ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று மட்டக்களப்பில் அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.