ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாண விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பின் அடையாள அட்டை வழங்கப்பட்டது வழங்கப்பட்டது

 




வரதன்

 

 

 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாண விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பின்  அடையாள அட்டை வழங்கியதையிட்டு  நாம் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்


அரசாங்கத்தினால் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பின் போது இந்த அடையாள அட்டை கிடைத்தது எனக்கு பேரு உதவியாக அமைந்துள்ளது மாற்றுத் திறனா ளிகள் தேர்தல் காலங்களில் போது இவ்வாறான அடையாள அட்டை வழங்கிய தை ஈட்டு நாம் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் வரிசையில் நீண்ட நேரம் நிற்க முடியாத எமக்கு சிறப்பு நன்மையை கிடைத்துள்ளதுடன் நேரமும் மிச்சப்படுகின்றது என இதனைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்


நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக தேர்தல் திணைக்களம் விஷேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதன்முறையாக இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடை யவர்கள் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன.

முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையு டையவர்களுக்கு விசேட வாக்களிப்பு  அடையாள அட்டைகள் விநியோகி க்கப்பட்டன.இவ் அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச் எம் சுபியான் தலைமையில் இடம்பெற்ற விசேட தேவையுடையோருக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜெ முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி மற்றும் சமூக மாவட்ட சமூக சேவை அதிகாரி உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.