வரதன்
ஜனாதிபதிக்கு இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகள் கிடைக்க உள்ளன ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றி பெறுவார் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டினை நான் வரவேற்கிறேன்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்
இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றி பெறுவார் என எமக்கு நம்பிக்கை உள்ளது அதிலும் குறிப்பாக பெண்கள் இம்முறை இனி ஒரு முறை இந்த பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ள க்கூடாது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க உள்ளனர் ஜனாதிபதிக்கு இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகள் கிடைக்க உள்ளன
எதிரணி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலும் நீண்டகால அனுபவமுடைய இந்த நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எதார்த்த பூர்வமாக அணுகி முயற்சியில் இறங்கியுள்ளார் என்ற அடிப்படையிலும் சிறுபான்மை கட்சிகளுடன் இணங்கி இம்முறை அதிகப் படியான வாக்கு பலத்தினால் வெற்றி பெற்று மீண்டும் ஒரு பொருளாதார சிக்கலில் இந்த நாடு சிக்கி விடாமல் அடுத்தாண்டு மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தி திட்டங்களையும் நிவாரணங்களையும் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்ட நிதியில் 50 மில்லியன் வழங்கப்பட்டது இதில் சாணக்கிய னுக்கு 400 மில்லியன் வழங்கப்பட்டது இதற்காக அவர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு வாக்களிப்பேன் அல்லது எதிராக பேச மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவ என அறிவித்த பின் மதில் மேல் பூனையாக அமைதியாக இருக்கின்றார் இப்படியான நிலைப்பாட்டில் மக்கள் பிரதிநிதிகள் இருக்காமல்
முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டினை நான் வரவேற்கிறேன் அவர்கள் தோல்வி என்று தெரிந்தாலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது கட்சி வெல்ல வேண்டும் என்பதற்காக மேடை ஏறுகின்றனர் அவர்களைப் போல் சஜித் மேடையில் இவர்களும் ஏற வேண்டும் அதனை விடுத்து விட்டு சதி வேலை களில் ஈடுபடக் கூடாது என்பது எனது நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவ நேசத்துறை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்