ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து மக்கள் சார்ந்து தமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
கோப்பாய் பகுதியில் அரச சேவையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற பிரசார நடவடிக்கைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர் என்பது நாட்டினுள் இன நல்லிணக்கத்தினைத் துண்டாடுவதற்கானதல்ல. மாறாக எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை வெளிக்காட்டுவதற்கானது.
இது ஜனநாயக ரீதியில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட உரிமைசார் நடவடிக்கையுமாகும் என்பதை புரிந்து கொண்டு அரச உத்தியோகத்தர்கள்தமிழ் மக்களின் பொதுச் சின்னமான சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நிரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.