இலங்கை ரீதியாக 244,228 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளார்கள்

 


 கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, 244,228 பேர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
 
கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.