1982முதல் 2002-ம் ஆண்டுவரை இசை நடனக்கல்லூரியில் பயின்ற மாணவிகளின் ஒழுங்கு படுத்தலில் "ஆசான்களுக்கான அணிசேர் கௌரவமளித்தல்" நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராம கிருஷ்ண விபுலானந்தர் மணி மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது .
பட்டிருப்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி டேசிராணி இராசகுமாரன் தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது .
முதன்மை அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகம் இந்து நாகரீகத்துறை பேராசிரியர் கலாநிதி சாந்தி கேசவன் கலந்து கொண்டார் .
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் v.வாசுதேவன் , மற்றும் களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
ஆரம்ப நிகழ்வாக அத்திதிகள் வரவேற்கப்பட்டு ,சுவாமி விபுலானந்தர் சமாதிக்கு மாலை அணிவிக்கப்பட்டதோடு மங்கள விளக்கேற்ற பட்டு இறைவணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின .
வரவேற்புரையை திருமதி சக்தீஸ்வரி சக்திவேல் நிகழ்த்தினார் .
ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வு இரண்டு கட்டங்களாக வெகு விமர்சையாக நடத்தப்பட்டன .