மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் 16 வது புகைப்படக் கண்காட்சி இன்று (06) திகதி வெள்ளிக்கிழமை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் இடம் பெற்றது.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் போராசிரியர் பாரதி கெனடி தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
BATTIMEDIA அனுசரணையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள குறித்த புகைப்படக் கண்காட்சியில் விசேட அதிதியாக மட்டக்களப்பு - கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க கலந்து சிறப்பித்ததுடன், புகைப்படக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன்று 2024.09.06 திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்புகைப்பட கண்காட்சியானது எதிர்வரும் 2024.09.18 திகதி .வரை இடம் பெறவுள்ளதுடன், மட்டக்களப்பு மண்ணின் வாழ்வியல் மற்றும் கலை கலாசாரத்தை மையப்படுத்தி பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் BATTIMEDIA இணையத்தளத்தின் பணிப்பாளர் எம்.சிவகுமார் அவர்களினால் புகைப்படமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.