ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசு உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 



ஜனாதிபதித் தேர்தலை  முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக தேவை இருப்பதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (ACFMA) இன்று கூறியுள்ளது.

பட்டாசு விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்வதற்கான அதிக தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.