அனைவரும் விரும்பும் ஒரு தலைவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார்- அமைப்பாளர் எஸ் சுதர்சன்

 

 


 வரதன்

 

 

 

உலக நாடுகளில் நன்கு அறிமுகமான திறமை மிக்க நாட்டிற்கு பொருத்தமான  அனைவரும் விரும்பும் ஒரு தலைவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார்- ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ் சுதர்சன்


இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று சொல்லாமல் அனைவரும் பாராளுமன்றத்தில்  அனைத்து.அமைச்சர்களும்  பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவரும் சரி கடந்த இரண்டு வருடமாக அவருடன் இணைந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு விடயத்தை கண்டுபிடித்தார்கள்


நாட்டிற்கு பொருத்தமான தலைவர் ஒருவர் தற்போது ஆண்டு கொண்டிருக்கி ன்றார் நன்கு திறமையானவர் உலக நாடுகளில் நன்கு அறிமுகமானவர் திறமை மிக்கவர் அரச பணிகளை சுதந்திரமாக செயல்பட செய்தவர் தமது திறமைக ளுக்கு வழி விட்ட வரை நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோமே இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர செய்தவரை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி ஆக்கினால் என்ன என்று சிந்திக்க தொடங்கினர்


அதன் விளைவாகத்தான் இன்று அவர் அனைவரும் விரும்பும் ஒரு ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார் நாங்கள் செய்ய வேண்டிய கட்சிப் பணிகளை இன்று அவர்களே முன்வந்த இந்தத் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்


 தேர்தல் தினத்தன்று நீங்கள் நன்கு யோசித்து பிழையானவர்களுக்கு இந்த வாக்கை அளித்தால் என்ன நடக்கும் என்று உங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்குமாறு  மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எஸ் சுதர்சன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.