FREELANCER
மட்டக்களப்பு கல்லடி உப்போடை / நொச்சிமுனை பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ மடிப்பிச்சை மற்றும் நெல்லுக்குத்தும் நிகழ்வு(2024.08.11) சிறப்பாக இடம் பெற்றது .
மட்டக்களப்பின் பலபகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் மற்றும் ,நேர்த்திக்கடன்களுக்காக மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர் , அத்தோடு மாலை வேளை ஆலய முன்றலில் நெல்லுக்குத்தும் நிகழ்வும் இடம் பெற்றது .பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஆலயத்துக்கு வருகை தந்து நெல்லுக்குத்தும் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர் .
இன்றையதினம்(2024.09.12) பள்ளயம் திருகும்பம் சொறிதலோடு பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
ஆலயத்தின் சடங்குகள் , பூஜைகள் யாவும் முதன்மை பூசகர் கு .கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது