மீண்டுமொரு யாத்திரிகள் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது

 


யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனைமற்றும் கண்டி  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிமத்தலாவ நகருக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று (21) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த இந்த வான் உயர் மின்னழுத்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புனித யாத்திரை சென்று திரும்பிய குழுவே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.