எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் நிலைப்பாடுகளில் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய தலைவர்களை தெரிவு செய்வதில் மக்களின் தீர்மானம் முக்கியமாகும் - சிவநேசதுரை சந்திரகாந்தன்

 


 

 

 

 ஜனாதிபதி விழுந்து கிடந்த நாட்டை ஒருவாரு தூக்கி நிமிர்த்தி  நம்பிக்கை அளித்து இருக்கின்றார்,  எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் நிலைப்பாடுகளில் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய தலைவர்களை தெரிவு செய்வதில் கல்வியாளர்களின் தீர்மானங்கள் முக்கியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் .
விவசாய நவீன மயமாக்களில் ஜனாதிபதியின் கொள்கையை  பின்பற்றுவதிலே கல்வியாளர்களின் பங்கு முக்கியமானதாகும். இதற்காக பணிகளை நன்கு திட்டமிட்டு செய்ய வேண்டி உள்ளது.

 திருமலையிலே தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளதாக ஒரு தமிழ் இயக்கம் ஏமாற்றிய வரலாறும் உண்டு. முன்னாள் கடந்து சென்ற தலைவர்கள் எமது மண்ணுக்கு செய்வோம் என்ற சொல்லியவற்றை நடத்திக் காட்டவில்லை
 எதிர்காலத்தில் அரசியல் திட்டமிடுகின்ற சக்திகள் ஆக இருக்கின்ற நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மனதில் நிறுத்தி திட்டங்களை முன் வைக்க வேண்டும்

 எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல் நிலைப்பாடுகளில் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய தலைவர்களை தெரிவு செய்வதில் உங்களது தீர்மானங்கள் முக்கியமானதாகும்.
 அதன் அடிப்படையில் தான் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியும்,  கல்வி தொழில் நுட்ப வளர்ச்சி மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறேன் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்களது திட்டமிடல்களை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம்.

விழுந்து கிடந்த நாட்டை ஒரு வாரு தூக்கி நிமிர்த்தி ஜனாதிபதி நம்பிக்கை அளித்து இருக்கின்றார் எதிர்காலத் திட்டமிடல்களுக்கு மூலதனம் அவசியமாகும் , அதற்கு மக்களின் ஆணை முக்கியம் என ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்  இன்று  மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.