மட்டக்களப்பு மண்முனை மேற்கு மாவடிமுன்மாரி அரசினர் பாடசாலையின் ஒழுங்குபடுத்தலில் தாந்தாமலை முருக பக்தர்களுக்கு பாற்சோறு மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது .









 

 FREELANCER

 

 

 வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு  தாந்தாமலை ஸ்ரீ முருகன்   ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2024.07.22. காலை தீர்த்தோற்சவதுடன்    திருவிழா நிறைவு பெற உள்ள நிலையில் , மட்டக்களப்பின் பல பாகங்களில்  இருந்தும் பக்தர்கள் ஆலயத்துக்கு  பாத யாத்திரையாகவும் , வாகனங்கள் மூலமாகவும் ஆலய தரிசனத்துக்காக பயணித்துக்கொண்டுள்ளனர் .
பக்தர்களின் தாக சாந்திக்காகவும் , பசியைப்போக்கும் நோக்கத்துடனும் மட்டக்களப்பு   மண்முனை மேற்கு அரசினர் பாடசாலையின் ஒழுங்குபடுத்தலில்   அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால்  பாற்சோறு மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது .