புகையிரத நிலைய அதிபர்கள் மேற் கொண்ட வேலைநிறுத்தமானது எனது அமைச்சு பதவி காலத்தில் முதல் தடவையும் இறுதியானதுமாக இருக்க வேண்டும்- பந்துல குணவர்த்தன

 

  வரதன்



 

 ஜனாதிபதிக்கு பலத்தினை வழங்குவதன் மூலம் முடியுமான வற்றை நாம் எதிர்காலத்தில் செய்து கொள்ள முடியும்  புகையிரத நிலைய அதிபர்கள் மேற் கொண்ட வேலைநிறுத்தமானது எனது அமைச்சு பதவி காலத்தில் முதல் தடவையும் இறுதியானதுமாக இருக்க வேண்டும்  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன
நாட்டை பிழையாக வழிநடத்த முடியாது பொருளாதார ரீதியாக நாட்டை கட்டி இழுப்பது சம்பந்தமாக நாம் திட்டங்களை முன்னெடுக்கும் போது. எழுப்புவது நாம் இயலுமானவற்றை செய்து வருகின்றபோது மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான புகையிரத சேவையை. பாதிப்படைய செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது  இந்தப் புகையிறத நிலையத்தில் கடமையாற்றும் சகல ஊழியர்களும் எதிர்காலத்தில் நீங்கள் எடுக்க உள்ள தீர்மானங்களை நன்றாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்

 நாட்டை அபிவிருத்தி செய்யும் இக்கட்டான காலகட்டங்களில் ஒத்துழைப்பு க்களை வழங்க வேண்டுமே தவிர  இங்குள்ள அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுகிறேன் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர்
விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் மட்டக்களப்பு  புகையிரத நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு புகையிரத நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்  ஈடுபட்டிருந்தார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன புகையிரத நிலைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், புகையிரத நிலையத்தின் நிலவும் குறைபாடுகளை பார்வையிட்டதுடன், அவற்றினை நிவர்த்திப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட அமைச்சரின் பணிக்குளாத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.