மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள்
இடம்பெற்று வருகின்ற நிலையில் செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி ஒரே நாளில்
பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டு சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் திருட்டு இடம்பெற்ற வீட்டில் இருந்த CCTV காணொளியை பார்வையிட்ட
போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைத்து
பொறுமையாக வீட்டை உடைத்து வீட்டில் உள்ள குளிர்பான பெட்டியில் இருந்து நீர்
அருந்தி விட்டு வீடு முழுவதும் தேடுதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த நகைகளை
கொள்ளை இட்டு சென்றுள்ளார்.
அதே நேரம் குறித்த நபர் அருகில் இருந்த இன்னும் ஒரு வீட்டிலும் எவ்வாறு
புகுந்து அவ் வீட்டில் இருந்த தாலி உட்பட பல லட்சம் பெறுமதியான நகைகளை
கொள்ளை அடித்துள்ளார்.
வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வெளியில் வந்து கதவை உடைத்த
போது கதவில் உள்ள கை அடையாளங்களை இல்லாது செய்யும் நோக்குடன் தண்ணீரால்
துடைக்கும் CCTV காட்சியும் பதிவாக உள்ளது.
இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்கள்
பதிவாகியுள்ளது. குறித்த வீட்டார் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு
தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.