எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் குழுவொன்றை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.