நான்கு பாடசாலை மாணவிகள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 7 தரம் 10 கல்வி பயிலும் பிரிந்தா வயது 12,ஹரணி வயது 12,சாரதா வயது 12, பிரியா வயது 15, ஆகிய மாணவியர்கள் இன்று காலை தங்களது வீட்டில் இருந்து நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்திற்கு வரும் வழியில் மறே தோட்ட வலதள பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் முச்சக்கர வண்டி மூலம் ஒரு மாணவி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏனைய மூன்று மாணவிகள் பேருந்துகள் மூலம் தற்போது வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு உள்ளது என நல்லதண்ணி தமிழ் வித்தியாலய அதிபர் எம். சரவணன் தெரிவித்தார்.