"மலரும் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

 


 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வு மட்டக்களப்பு   மாவட்ட  அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முதளிதரன் தலைமையில்,  உதவி மாவட்ட  செயலாளர் ஜி.பிரணவன் ஏற்பாட்டில் மாவட்ட  செயலகத்தில்  (17)  இடம் பெற்றது.

மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினுடாக முன்பள்ளி அபிவிருத்தி தேசிய செயலகமானது அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நாடலாவி ரீதியில் இந் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.

"மலரும் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் ஜூலை மாதம் 14 ஆம்  திகதி முதல் 20 ஆம் திகதி வரை  இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் சிறார்களின் கண்கவர் நடனங்கள், சிறுவர்களின் பேச்சுக்கள் கலை அம்சங்கள் பல அரங்கேற்றப்பட்டன.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஶ்ரீகாந்த், நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), வைத்தியர் ஶ்ரீநாத், திணைக்கள தலைவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.