மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து பாரிய விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது .

 





 


 

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து ஒன்றும் ,நேற்றிரவு  மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து ஒன்றும் மல்சிறிபுரவிற்கு அண்மையில் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது .
அதி சொகுசு பேரூந்து பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது . மட்டக்களப்பிலிருந்து பயணித்த பேரூந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அறிவிக்கப்படவில்லை
போலீசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்