மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புது குடியிருப்பு பகுதியில் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.


வரதன் 

 

 

 

மட்டக்களப்பு புது குடியிருப்பு பகுதியில்  எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனம் மின்சார கம்பத்துடன்  மோதியதால் அதிகாலையில் மின்சாரத் தடை ஏற்பட்டதுடன்,  தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.மின் கம்பிகள்  சேதமடைந்ததன் காரணமாக கல்முனை பிரதான வீதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன
மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட  புது குடியிருப்பு பகுதியில்  கண்ணகி அம்மன் ஆலயத்து கருகில் இன்று அதிகாலை கல்முனை யில் இருந்து கொழும்பின் நோக்கிச் சென்ற இந்த எரிபொருள் ஏற்றிச் செல்லும்  வாகனமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது,   இந்த விபத்து   சம்பவத்தில் பேருந்து தரிப்பிடத்தில்  மோதி அதன் பின்பு  வீதி ஓரத்தில் நின்ற மின்சார சபைக்கு சொந்தமான தூண்களில் மோதி அதன் பின் தொலைத் தொடர்பு கம்பத்திலும் மோதிய பின்னர் அருகில் இருந்த வீட்டு சுவர் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
 சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புது குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது  விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் வாகனத்தின் நடத்துனர் படுகாயங்கள் அடைந்த  நிலையில்  வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
 விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த  காத்தான்குடி போக்குவரத்து போலீசார் விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.