முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த அகழ்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளும், சையனைட் குப்பி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
குறிப்பாக, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார் போன்றோரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.