மட்டு.திருப்பழுகாமம் கண்ணகையம்மன் ஆலய சங்காபிஷேகத்தை முன்னிட்டு பாற்குடப்பவனி!


 


 


 









(மட்டக்களப்பு நிருபர்)



 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புகழ்பூத்த கண்ணகையம்மன் ஆலயங்களுள் ஒன்றான திருப்பழுகாமம் கண்ணகையம்மன் ஆலய சங்காபிஷேகம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது சங்காபிஷேகத்தை முன்னிட்டு திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பாற்குடப்பவனி ஊர் வீதி வழியாக கண்ணகையம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க,வேதபாராயணங்கள் முழங்க பரிபாலன தெய்வங்களான கண்ணகையம்மன் மற்றும் வைரவர் தெய்வங்களுக்கும் பக்த அடியார்கள் புடைசூழ, வேதபாராயணங்கள் முழங்க சங்காபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.

இச் சங்காபிஷேகப் பெருவிழாவினை பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் ஆலய நம்பியார் சிவஸ்ரீ க. சுந்தரம்,சிவஸ்ரீ ந.கு.பத்மநிலோஜஈசான சிவம்,வி.கு.சிஷ்யமேனன்சர்மா  ஆகியோர் நிகழ்த்தி வைத்தனர்.

இப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.