மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் திருவிழாவை முன்னிட்டு மட்டு.மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் .


 






FREELANCER

கிழக்கிலங்கையில்   பிரசித்தி பெற்ற மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும்,  மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு   மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில்  கலந்தாலோசனைக்கூட்டம்  இடம் பெற்றது.
இந்த கூட்டத்தில்   ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார்கள், பிரதேச   கிராம சேவை உத்தியோத்தர்கள், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் , மின்சார சபை உத்தியோகத்தர்கள், தேசிய நீர்வழங்கல் சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதரர்கள்  என பலரும்  கலந்து கொண்டு திருவிழா காலங்களில் முன்னெடுக்கவேண்டிய செயல்திட்டங்கள்  மற்றும் முன்னேர்ற்பாடுகள் பற்றி தமது ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர் .
 2024.07.26.ம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகும்  திருவிழாவானது 2024.08.04.  அன்று தீர்த்தோர்ற்சவதுடன் முடிவடையும் , இந்த காலப்பகுதியில் ஆலயத்திற்கு பல்வேறு பிரதேசங்களில் இருந்து பக்த வரும் அடியார்களுக்கு முக்கியமாக   ஒழுங்கு படுத்த வேண்டிய  போக்குவரத்து, பாதுகாப்பு , சுகாதார வசதிகள்  பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது .
மேலும் திருவிழாக்காலங்களில் கேளிக்கை மற்றும் பச்சை குத்துதல் போன்றவை முற்றாக தடை செய்ய  பொலிஸ் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டது