FREELANCER
கடந்த 2024 05 .04 அன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ் ) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் .
கடந்த 20வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசப்படாமலும் அதே நேரம் வெளிச்சவீடு புனரமைக்கப்பட வேண்டிய கட்டாய தேவை இருப்பதை பிரதேச பொதுமக்களும் , மீனவர் சமூகமும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர், அவர்களின் கோரிக்கையினை செவிமடுத்த அமைச்சர்
உடனடியாக வெளிச்ச வீட்டை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் .
அதனடிப்படையில் துரித கெதியில் வெளிச்ச வீடு புனரமைக்கப்பட்டது
நேற்றைய தினம் மீள் புனரமைக்கப்பட்ட வெளிச்ச வீட்டினை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார் , இவ் நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் , மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் சிவலிங்கம் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .