தரம் - 3 மாணவர்கள் மாதிரிக்கடை அமைத்து உரையாடல், மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை

 

 




 

 













 


(மட்டக்களப்பு நிருபர்)



மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் தரம் - 3 மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) தமது வகுப்பறையில் மாதிரிக்கடை அமைத்து பல உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது பெற்றோர்கள் பல பாரம்பரிய உணவுப் பொருட்கள் உட்பட பல உணவுப் பண்டங்களைத் தயாரித்தும்,வாங்கியும்
இக்கடை சிறப்புப் பெற அனுப்பி வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.

இக்கடை நிகழ்வின் மூலம் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கிடையிலான தொடர்பு வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.