ஜனாதிபதி அடுத்த வருடம் புலமைப்பரிசில் வழங்கும் இந்த ஊக்குவிப்பு தொகை 2 மடங்காக வழங்க உள்ளார்-. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்


  




 வரதன் 

 

 

 நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் இருப்பதால் அவர்களது வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் படி ஜனாதிபதி சகல ஆளுநர்களுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளார்.  இந்த நாட்டை வழிநடத்த உள்ள அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதோடு. அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னின்று செய்து கொடுக்கும்படி உத்தரவு வழங்கியுள்ளார் .


ஜனாதிபதி இந்த ஊக்குவிப்பு தொகை அடுத்த வருடம் இரண்டு மடங்காக வழங்க உள்ளார். அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை கல்விக்காக உங்களது கல்வி மூலம் தான் இந்த நாட்டிற்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உள்ளது.

ஜனாதிபதியும் உங்களைப் போன்று ஒரு நாள் மாணவராக இருந்தவர் தான் கல்வி அமைச்சரின் பணிகளும் மிகவும் பாராட்டத்தக்கது எதிர்காலத்தில் ஜனாதிபதி மாணவர்களுக்கு இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளார் என

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.