ஜனாதிபதி வேட்பாளர் பெயரை 24திகதி பொதுஜன பெரமுன அறிவிக்க உள்ளது

 

 


எதிர்வரும் 24 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் தமது கட்சியின் வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டுமெனவும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4 தொடக்கம் 6 வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல்களை ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் வேட்பாளரை எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.