(மட்டக்களப்பு நிருபர்)
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சியம்மன் ஆலயங்களுள் ஒன்றான ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று சனிக்கிழமை (20) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி,எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பள்ளையச் சடங்கு மற்றும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இதன்போது 23 ஆம் திகதி கும்ப ஊர்வலச் சடங்கும்,25 ஆம் திகதி வீரகம்பம் வெட்டுதலும் பலிச்சடங்கும் நடைபெறவுள்ளன.
ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதம பூசகர் சிரோன்மணி சக்தி ஸ்ரீ பூ.மகேந்திரராஜா தலைமையில் உதவிப் பூசகர்களான சக்திஸ்ரீ ம.முரளிதரன் மற்றும் சக்திஸ்ரீ பா.அருணன் ஆகியோரால் நிகழ்த்தப்படுகின்றது.