மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் பிரதான நிகழ்வு -2024. 07. 16

 














































வரதன்

 

 

 

 

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100,000 மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைபெறும் மட்டக்களப்பு மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தலைமையில்  இன்று  இடம்பெற்றது.

 இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வளையங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1500 மாணவர்களுக்கு இந்த ஜனாதிபதி புலமை பரிசில் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இடம்பெற்ற மாவட்ட பிரதான நிகழ்வுக்கு  பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாகிர் மௌலானா மற்றும் அதாவுல்லா இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர் கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் வளைய  கல்வி பணிப்பாளர்கள் பிரதேச செயலாளர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் இவ்நகல்வில் கலந்து கொண்டனர்.