மட்டக்களப்பு - செங்கலடி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா!










 

(கல்லடி செய்தியாளர்)

 

 

செங்கலடி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 7ம் திகதி கர்மாரம்பத்துடன்  ஆரம்பமானது.

அன்றையறைய நாள் சிறப்பு யாக பூஜை இடம்பெற்றதுடன், ஆலய நந்திக் கொடியும் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் திகதி ஆலயத்தில் எண்ணைய்காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை (13) விநாயகப் பெருமானுக்கான மகா கும்பாபிஷேகப் பெருவிழா, பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது.

காலை முதல் சிறப்பு யாகப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி இடம்பெற்றது.  

தொடர்ந்து பிரதான கும்பங்களின் வீதிப் பிரதட்சணம் ஆரம்பமானது.

இதன்போது மங்கல வாத்தியங்கள் முழங்க வேத மந்திர பாராயணங்கள் நிகழ ,   விநாமகப்பெருமானுக்கு பக்கர்களின் அரோரோகரா கோசத்துடன், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கலடி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.