உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைக் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்ததாக கூறப்படும் முன்னைய தகவல்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராயவே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் அறிக்கையை இவ்வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.