பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தாக்குதல் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களை மீட்பு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.