அரசமைப்பில் காணப்படும் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தையும் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தையும் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பதவிக்காலம் தொடர்பான நிலைத்தன்மையை உறுதி செய்வதை அது புறக்கணித்தது. 19ஆவது திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம், ஜனாதிபதியின் ஆறு வருட பதவிக்காலம் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டாலும் உறுப்புரை 83 (டி) கவனிக்கப்படாமலும் மாற்றப்படாமலும் இருப்பது ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
விக்கிரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாடு தயாராக இல்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்த கருத்துகளுடன் இதையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.