உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக "நிலம் மறுசீரமைப்பு வறட்சியை தாங்கும் தன்மை" எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின ஏற்பாட்டில் மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


 





































 FREELANCER

30.05.2024 தொடக்கம் 05.062024 வரையான காலப்பகுதி சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முறையே 31.05.2024  மட் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடும் , 03.06.2024 இருதயபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சுற்றாடல் சுத்தப்படுத்தலும், 04.06.2024 திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் செயற்பாடும்   முன்னெடுக்கப்பட்டிருந்தன.  அதன் தொடர்ச்சியாக  05.06.2024 நேற்று உலக சுற்றாடல் தினத்தை (நிலம் மறுசீரமைப்பு வறட்சியை தாங்கும் தன்மை) எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு  பிரதேச செயலகத்தினரோடு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூர்த்தி திணைக்களமும் இணைந்து  பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில்  இருதயபுரம்  கிழக்கு  மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள  வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள்  நடப்பட்டு  சுற்றாடல் தினம்  சிறப்பிக்கப்பட்டது .

இந் நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, சிவில் பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் பொலிஸ் உத்தியோகத்தர்,  கிராம நிர்வாக உத்தியோகத்தர்,  கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,  சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்,  மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பழ மரங்களும்  நடுகை  செய்யப்பட்டன.