(கல்லடி செய்தியாளர்)
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை ( 07) கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கு 6 துவிச்சக்கரவண்டிகள் திருத்தி வழங்கப்பட்டது.
மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி பாடசாலையில் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட 6 துவிச்சக்கர வண்டிகளையும் முனைப்பு நிறுவனம் பெற்று புதிய உதிரிப்பாகங்களைப் பொருத்தி 88,500/= செலவில் திருத்தி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு அதிபர் முன்னிலையில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோரினால் இவை மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
ஒரு துவிச்சக்கர வண்டியினை இரண்டு மாணவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதுடன் குறித்த மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் போது பாடசாலையில் துவிச்சக்கர வண்டியினை ஒப்படைத்துச் செல்வார்கள். இந்நிலையில் மீண்டும் வேறு மாணவர்கள் அதனை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.