பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வெகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .
தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாகவும்
மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது .