ஈரானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

 


 22 வயதான ஈரானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஈரானிய யுவதி, ஆயுர்வேத மசாஜ் செய்வதற்காக ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு பல ஈரானியர்களுடன் வந்ததாகவும், அங்கு சந்தேக நபர் மசாஜ் செய்ய வாய்ப்பு கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர் மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.