FREELANCER
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மட்டக்களப்பு கோல்டன் ரிவர் தனியார் விடுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் "ஊடக மன்றம்" ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது, இதன் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் ஊடாக வெளிநாடு சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து மீண்டும் தாயகம் திரும்பி எமது நாட்டில் பலருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி வாழ்க்கையை முன்னேற்றியவர்களின் வெற்றிக்கதைகளை சிறப்பான முறையில் காணொளியூடாக தொகுத்து வழங்கியமைக்காக சக்தி ரீவி மற்றும் சக்தி எப்எம். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியளாலர் சித்தாண்டியைச் சேர்ந்த நல்லதம்பி நித்தியானந்தன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .