வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் கைது .

 

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த நில்மினி என்ற பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர் பணியக சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk அல்லது 1989 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் தகவல்களைப் பெறுமாறு பணியகம் மேலும் கேட்டுக்கொள்கிறது.