யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக் களின் நெருங்கிய உறவு
முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் , தொடக்கு கழிக்க முதல் ,
தொடக்குடன் ஆலய மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக மகோற்சவ காலத்தில்
குருக்களுடன் முரண்பட்டுள்ளனர். அதன் போது கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை
அடுத்து , எதிராளிகளான மூவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து
இருந்தனர். அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் ,
காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம்
தொடர்பில் முரணப்பாடு காணப்பட்டு வருகிறது. இது தொடர்பில் நீதிமன்றில்
வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த
வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , இன்றைய தினம் சனிக்கிழமை பூங்காவன
திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது