செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வில் மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

 


யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுவரை 101 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 21 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று (26) நடைபெற்றது. 

இன்றைய அகழ்வில் மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதனால் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை, 90 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.  அவற்றுடன் 46 பிற ஆதாரப் பொருட்களும் உள்ளன.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு  பாதுகாப்பு அமைச்சு  இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டத்தரணி நிரஞ்சன்  தெரிவித்துள்ளார்.