மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை - சஜித் பிரேமதாச

 



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று  நடத்திய ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

நான் இங்கு வந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன். இதனை நாட்டின் அனைத்து இடங்களிலுமே முன்னெடுத்து வருகிறேன். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கானை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.

இவ்வாறு பாடசாலைக்கு, வைத்தியசாலைக்கு என உதவிகளை செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனை ஒரு பணியாகச் செய்து வருகின்றேன்.

இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன. அதிலும் ஜனாதிபதி ரணிலுடையடைய செயல்பாடு கோடிபதிகளை முன்னிறுத்தி நடக்கிறதே ஒழிய  சாதாரண மக்களுக்கானது அல்ல.  நாட்டை பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இணைந்து  செயல்படும் நபர்களுடன் ஒரு நாளும் நான் இணைந்து செயல்பட போவதில்லை. அவ்வாறானவர்களுடன் எந்தவித பேச்சுவர்த்தைகளும் இல்லை.

நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, புதிய அரசியல் பிறாண்டாக எனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.