சவூதியில் மனைவி கொடூர பாலியல் துன்புறுத்தல் , சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை.

 


வீட்டு வேலைக்காக சவூதி சென்ற மனைவி கொடூர பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தம்புள்ளை அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய ரஞ்சித் என்பவர் நேற்று (07) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்