(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )
கல்லடி- உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு நிலையம்,ஐஸ்வர்யம் யோகா நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய மாபெரும் யோகா தின நிகழ்வு இன்று கல்லடி- உப்போடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லடி - உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மகராஜின் வரவேற்புரை மற்றும் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது யோகா செயன்முறை மூன்று படிமுறைகளாக மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு சிறப்பு யோகா செயன்முறையினை சிவலிங்கம் ஸ்ரீதரன் அவரது குழுவோடு இணைந்து மேற்கொண்டார். இதில் பெருமளவான ஆண்,பெண் மாணவர்கள் பங்கேற்றனர்.