(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )
கிழக்கிலங்கையின்
வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு
ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய திருநெறிய தெய்வத்தமிழ்
(மகாகும்பாபிஷேகம்) இன்று வியாழக்கிழமை (20) காலை 10.30 தொடக்கம் 11.30 மணி
வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் வள்ளி,தெய்வானை சகிதம் முருகப்
பெருமானுக்கும் பரிபால தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்பட்டது.
இத்
திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவினை
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்
தலைவரும் கேந்திரிய மாருக தர்ஷன் அறங்காவலரும் மற்றும் பேரூர் ஆதின 25
ஆவது குருமார் சந்நிதானங்களுமாகிய முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க
மருதாச்சர அடிகளார் தலைமையில் அவரது சீடர்கள் இருவரும் மதுரை தெய்வச்
செந்நெறிக் கழகத்தின் தலைவர் பூச்சிய ஸ்ரீ சிவானந்த சுத்தானந்த மகராஜூம்
அவரது சீடர்களும் திருநெல்வேலி பறசமய கோறளிநாத ஆதீனக் குருமார்
சந்நிதானங்களும் தர்மபுரம் ஆதீனத்தினுடைய திருக்கேதீச்சரம் கட்டளை விசாரணை
ஸ்ரீ மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகளும் திருவெண்ணாமலை சடைச்சாமி
ஆச்சிரமத்தின் 5 ஆவது மடலாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள் இலங்கையைச்
சேர்ந்த மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் நீலமாதவானந்தாஜீ
மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோர் நிகழ்த்தி வைத்தனர்.
இப்
பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல
நூற்றுக்கணகான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து பெருந்திருமஞ்சனம்,தசதரிசனம்,அலங்கார தரிசனம்,அலங்கார பூசை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.