(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் புதன்கிழமை (19) ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றும் வியாழக்கிழமை (20) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் "தங்களின்,
மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி", "பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி, பல்கலைக்கழக சமூகத்திற்கு பொதுக் காப்புறுதி முறைமையை நடைமுறைப்படுத்தி, ஏற்றுக் கொள்ளப்பட்ட 107% சம்பளம் அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு"
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக பிரதான நுழைவாயிலின் இரு மருங்கிலும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.