(
கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மயிலம்பாவெளி கோட்டைமுனை கிராம விளையாட்டுக் கழகத்துக்கும் அவுஸ்திரேலிய டார்லிங்ரன் சோசல் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டிசனிக்கிழமை (11) கோட்டைமுனைக் கிராம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அணிக்கு 11 பேர் கலந்து கொண்ட 35 ஓவர்களை உள்ளடக்கியதாக இப்போட்டி அமைந்திருந்தது.
மட்டக்களப்பில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலேயே இச் சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி நடாத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


















