சவூதி அரேபியா தூதுவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம். சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார்.

 






 






சவூதி அரேபியா தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி  இன்று(08) புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து  சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார்.

இதனை பார்வையிடுவதற்கு வருகைதந்த  சவூதி அரேபியா தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் எஸ் எஸ்.எம்.ஜாபீர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன் போது வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான  மன்னர் மையம் நிறுவனத்தின் பணிப்பாளர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் அப்துல் கரீம் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் வருகை தந்தனர்.

சவூதி அரேபிய தூதுவருக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபீர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். மேலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற் கொள்வதை தூதுவர் பார்வையிட்டதுடன் கண் புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்திய சாலையில் தங்கியிருப்பவர்களையும் தூதுவர்‌ சந்தித்து கலந்துரையாடினார்.