ஓய்வு நிலை அதிபர் நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் புத்தக வெளியீட்டு விழா.

 






மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த கலைச்சுடர் இலக்கிய வித்தகர் ஓய்வு நிலை அதிபர் நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் நூல் வெளியீட்டு விழா கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் (25.04.2024) மாலை வெளியீட்டு வைக்கப்பட்டது.

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவை, மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து, பிரதேச செயலாளரும், கலாசார பேரவைத் தலைவருமான திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் பிரதேச செலயக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 இதன்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்கள் கலந்து கொண்டு நூலை வெளியீட்டு வைத்தார்.

 மேலும் இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கணேசன் மதிசீலன், சிவ ஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள், பாடசாலைகளின் அதிபர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், கலாசார உத்தியோகஸ்த்தர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன்போது நாட்டார் வழக்காறுகள்  எனும் நூலின் அறிமுக உரையை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.ராஜதிலகனும், நூல் ஆய்வு உரையை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் சிரேஷ்ர விரிவுரையாளர் க.மோகனதாசும் அவர்களும், ஏற்புரையை நூலாசிரியர் கலைச்சுடர் நாராயணபிள்ளை நாகேந்திரன் நிகழ்த்தினர்.